“அண்ணன் காமராஜ் அவர்களது இந்த வெளிப்படையான அன்பான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்”- டி.ஆர்.பி.ராஜா

 
trb raja

100 ஆண்டு ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் செய்ய முடியாது என டிஆர்பி ராஜாவுக்கு அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் புகழாரம் சூட்டினார். மேலும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சில இடங்களில் பேசும்போது வருத்தப்பட்டு பேசினார். எனக்கே அது சங்கடமாக இருந்தது... இப்படி வருத்தப்படுவீர்கள் என தெரிந்திருந்தால் சீட்டே வேண்டாமென சொல்லி இருப்பேன் என்று அவரிடம் கூறினேன் என காமராஜ் பேசினார். 

ச்

இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, “மாண்புமிகு மன்னார்குடி MLA அண்ணன் காமராஜ் அவர்களது இந்த வெளிப்படையான அன்பான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை நோக்கிய அரசியலை விதைக்கத்தான் நானும் எனது தலைவர் அவர்களும் எப்போதும் உழைக்கிறோம். 


அவரவர் சார்ந்துள்ள கட்சிகளால் வேறுபட்டாலும் மன்னார்குடி மீதுள்ள பற்றால் அதன் வளர்ச்சியில் இணைகிறோம். தேர்தலுக்கு பின்பு, அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உழைத்தால்தான் அந்தப் பகுதி செழிக்கும் என்பதை நான் எப்போதும் நம்புபவன். இதையே பல முறை பல மேடைகளில் பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறேன். நமது மன்னார்குடியின் வளர்ச்சி தொடர எனது முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். தொடர்ந்து மன்னார்குடி மின்னும்.மின்ன வைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.