"கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும்" அமைச்சர் சிவசங்கர்

 
Sivasankar Sivasankar

சென்னை பட்டினப்பாக்கம் பணிமனை திறந்து வைத்தபின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச் சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மைதான், அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் சிலர் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்து விடலாம் என கூறுகின்றனர். தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

minister sivasankar

போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்கு தெரியவில்லை?

sivasankar

நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். SETC பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும்போது ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்குவதுதான் சரியாக இருக்கும்" என்றார்.