அகில இந்திய சுற்றுலா பேருந்துகளுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!
Jun 11, 2024, 09:51 IST1718079674475

அகில இந்திய சுற்றுலா வாகன அனுமதிச் சீட்டை பெற்று, பயணிகள் பேருந்து போல கட்டணம் வசூலித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பற்றிய விவரங்களை 1 வருடத்துக்கு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனவும், கேட்கப்படும் நேரத்தில் பயணிகள் விவரங்களை காண்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.