“என் வீட்டுக்கு வந்து உன்னை நாசப்படுத்திடுவேனு மிரட்டுறான். இதெல்லாம் ஒரு ஆம்பளைக்கு அழகா?”- நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்

 
s

விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் பலமுறை ரிசார்ட்டிற்கு அழைத்து சென்று பழகிவிட்டு ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை வைஷூ என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். அவரு கூட மனைவியா நான் வாழ்ந்திருக்கேன்... 5 வருடமாக பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு பணத்தையும் வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் தன்னை கஞ்சா வியாபாரி என சொன்னதற்காக இன்று மீண்டும் நாஞ்சில் விஜயன் புகார் தெரிவித்த திருநங்கை வைஷூ, “நாஞ்சில் விஜயன் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதுபோல, சூர்யா தேவியிடமும் பணம் வாங்கி ஏமாற்றியிருப்பார். தயவு செய்து முதல்வர் விஜயும், கமிஷனர் ஆபிஸ் அதிகாரிகளும் சேர்ந்து என்னுடைய பணத்தை வாங்கி கொடுக்க வேண்டும். இந்தமுறை நாஞ்சில் விஜயன் மீதான புகாரை நான் வாபஸ் வாங்க மாட்டேன். போனமுறை புகார் அளித்தபோது அவர் மீது காதல் இருந்தது. அதனால் புகாரை திரும்ப பெற்றேன். என்னை கஞ்சா வியாபாரி எனக் கூறியதற்காக நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்க வேண்டும். 

நாஞ்சில் விஜயன் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. 16 வருஷம் அவர் கூட நான் பழகி இருக்கேன்.. 7 வருஷம் அவர் கூட குடும்பம் நடத்தி இருக்கேன்.. அவரை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. மீடியா முன்னாடி நல்லவன் மாதிரி நடிப்பான்.. ஒரு திருநங்கையா சினிமாவில் 15 வருஷமா கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துட்டு இருக்கேன்.. என்னை எப்படி அவர் கஞ்சா வியாபாரினு சொல்லலாம்..? எந்தெந்த இடங்களுக்கெல்லாம் நீ வாய்ப்பு கேட்டுப்போறீயோ, அங்கே வாசலில் கூட உன்னை நுழைய விடமாட்டேன் என பிளாக் மெயில் பண்றான். என் வீட்டுக்கு வந்து உன்னை நாசப்படுத்திடுவேனு மிரட்டுறான். இதெல்லாம் ஒரு ஆம்பளைக்கு அழகா? என்னுடைய பெயரை நாஞ்சில் விஜயன் பயன்படுத்தக்கூடாது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.