காதலி திருநங்கை என தெரிந்ததும் விலகிசென்ற காதலன்! திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

 
rape

இன்ஸ்டாகிராமில் பெண்ணாக அறிமுகமாகி இரண்டு வருடமாக காதலித்து,  பின்பு திருநங்கை என்று தெரிந்தவுடன் விலகிய காதலனால் அந்த திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணைய வகுப்பில் ஆபாச படம்: ஆசிரியர் இடமாற்றம் | teacher transferred for  watched pornography in online class - hindutamil.in
 
சென்னை ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 16வயது உடைய திருநங்கை செம்பா, மற்றொரு திருநங்கையான ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். ஆண்ட்ரியா காசிமேட்டில் உள்ள  தாய் மற்றும் சகோதரி வீட்டிற்கு  சென்று சாப்பிட்டு தனியாக வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்த ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் திருநங்கை செம்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட ஆண்ட்ரியா உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ராயபுரம் போலீசார் போலீசார் செம்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் செம்பா ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்  ஓசூரில் உள்ள மஞ்சுநாத் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் செம்பாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் இவர்கள் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் பேசும்போது செம்பா தான் பெண் இல்லை ஒரு திருநங்கை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் தங்கள் வீட்டில் திருநங்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திருநங்கை செம்பாவிடம்  பேசுவதை நிறுத்தியுள்ளார். இதில் மன உளைச்சலில் இருந்த செம்பா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது