17 வயது சிறுவனை வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கை

 
rape rape

குமாரபாளையத்தில் 17 வயது பள்ளி மாணவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்து கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் திருநங்கை கைது செய்யப்பட்டுள்ளார்.

rape

குமாரபாளையம் சுள்ளிமலை தோட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருநங்கை அருந்ததி (52) என்பவரை திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடைக்கு குளிர்பானம் வாங்க சென்ற 17 வயது சிறுவனை வீட்டில் உயரத்தில் உள்ள பொருளை எடுத்துத் தருமாறு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த 52 வயதான அருந்ததி  என்ற திருநங்கையை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

1098 என்ற எண்ணுக்கு பாதிக்கப்பட்ட சிறுவன்  தொலைபேசி மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலர் சவுண்டேஸ்வரி நடத்திய விசாரணை அடிப்படையில் சிறுவனின் தந்தை முருகன் (40) கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்து போக்சோ ஆக்ட் 2012 ன் கீழ் வழக்கு பதிவு செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினார்கள்.