தமிழ்க் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றம் - அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது என சு.வெங்கடேசன் ட்வீட்!!

 
mp

தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும், சென்னைக்கு இடமாற்றம் செய்யும் உத்தரவிற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

ttn

மைசூரில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தையும்,  சென்னைக்கு மாற்ற இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட   தமிழக கல்வெட்டுக்கள் 1966ஆம் ஆண்டு மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழ் கல்வெட்டுக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,  தமிழ் கல்வெட்டுகளில் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி கல்வெட்டுக்கள் அனைத்தும் இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தமிழ் கல்வெட்டுகள் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என அழைக்கப்படும் என்றும் தொழில்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு தமிழ் ஆர்வலர்கள்  வரவேற்பு தெரிவிட்டுள்ளனர்.



இந்நிலையில் எழுத்தாளரும், மதுரை எம்.பி.யுமான சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அலுவலகம் இனிமேல் “தமிழ் கல்வெட்டு அலுவலகம்” என்று அழைக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.