தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Updated: Nov 11, 2024, 20:13 IST1731336235222
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சுற்றுலாத்துறை மேலாண் இயக்குநராக இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தேசிய சுகாதார ஆணைய திட்ட அதிகாரியாக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தொழிலாளர் துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த் சிறு,குறு, நடுத்தர தொழில் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சமக்ரா சிக்ஷா திட்ட மாநில இயக்குநராக இருந்த ஆர்த்தி துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.