பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப்.2 வரை ரயில்கள் நிற்காது

 
பேசின் பிரிட்ஜ்

சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக புறநகர் பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் பிரதானமான ஒன்று. இந்த ரயில் நிலையத்திற்கு வரும் ஏராளமான பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, மின்சார ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படாமல் இருப்பதால் பாதுகாப்பின்றி அந்த இடம் இருப்பதாக கூறும் பொதுமக்கள் இங்கு சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப் பட்டால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பேசின்பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.