பயிற்சியில் இருந்த காவலர் மாரடைப்பால் பலி

 
அ அ

தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆவடி பட்டாலியனில் பயிற்சியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் ஆவடி 5வது பட்டாலியன் படையில்காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்த சந்தோஷை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காவலர் சந்தோஷ் இறப்பு குறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின் போது இளம் காவலர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனது ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது