சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

 
ச் ச்

கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட்டை லாரி இடித்து சேதப்படுத்தியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Volume Overview: Gummidipoondi | தொகுதி கண்ணோட்டம்: கும்மிடிப்பூண்டி

சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட்டை கடந்து சென்ற போது அடையாளம் தெரியாத லாரி ஒன்று ரயில்வே கேட்டை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றது. ரயில்வே கேட் சேதப்படுத்தப்பட்டதால் அதனை மூட முடியாமல் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட ரயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே கேட் சீரமைக்கப்பட்டு ரயில்களுக்கு சிக்னல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இரு மார்க்கங்களிலும் ரயில்கள் இயக்கப்பட்டன. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.