சென்னை-திருவள்ளூர்-அரக்கோணம் ரயில்வே வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை பாதிப்பு

 
train train

வியாசர்பாடி அருகே நேற்று மாலை உயர்அழுத்த மின் தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட‌து. இன்று காலை மீண்டும் மின் தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின்சார ரயில்கள் நேர அட்டவணைப்படி இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக ரயில்கள் அதிகாலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே ஊழியர்கள் இரண்டு மணி நேரம் போராடி தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயில்கள் ஒன்றின் பின் ஒன்றாக புறப்பட்ட சென்றது. இதைத் தொடர்ந்து மின்சார ரயில்களும் இயக்கப்பட்டது இரண்டு மணி நேரம் காலதாமதமானதால் ரயில் பயணிகள் கடும் இனளுக்குள் ஆளாகினர்.

பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி விரைவு ரயில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சேரன் விரைவு ரயில், பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி விரைவு ரயில், காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் காச்சிகுடா விரைவு ரயில், ஆகிய ரயில்கள் இரண்டு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோன்று அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லக்கூடிய மின்சார ரயில்களும் திருத்தணியில் இருந்து சென்னை செல்லக்கூடிய மின்சார ரயில்களும் 2 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்ட சென்றது குறிப்பிடத்தக்கது.