ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே தீடிரென கழன்ற சக்கரம்! தடம் புரண்டு பெரும் விபத்து
சென்னையிலிருந்து போடி செல்லவிருந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து போடிக்கு வாரம்தோறும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு இன்று காலை மதுரை ரயில் நிலையத்திற்கு 7:30 மணிக்கு ஐந்தாவது நடைமேடைக்கு வந்தடைந்தது. இந்நிலையில் மதுரை ரயில்வே நிலையத்தில் 5ஆவது பிளாட்பார்மில் தண்டவாளத்தில் பயணிகளை இறக்குவதற்காக மெதுவாக செல்லும்போது திடீரென இஞ்சி அருகே உள்ள முதல் பெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் உள்ள சக்கரம் தடம்புரண்டது.
இதனையடுத்து அவசர அவசரமாக ரயிலானது நிறுத்தப்பட்டு ரயில் பைலட்டுகள் இறங்கிப் பார்த்தபோது தண்டவாளத்தில் இருந்து சக்கரம் கீழே தடம் புரண்டு இருப்பதை கண்டு உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனிடையே மாற்று ஏற்பாடாக :820 மணிக்கு செல்லக்கூடிய பேசஞ்சர் மதுரை to போடி சொல்லக்கூடிய பயணிகளை மாற்று ரயில் மூலமாக அனுப்பி வைத்தனர். மதுரை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட ரயிலில் அதிக 90% பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் இறங்கியதால் குறைவான பயணிகளை போடிநாயக்கனூர் செல்ல இருந்ததை மாற்று ரயிலில் அனுப்பியதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சக்கரம் தடம் புரண்டதை சரி செய்வதற்கான பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் தூக்கு இயந்திரமான ( ஜாக்கி) இயந்திர மூலமாக தடம் புரண்ட பெட்டி தூக்கப்பட்டு ரயில் சக்கரமானது தண்டவாளத்தில் வைக்கப்பட்டது. பின்னர் தடம் புரண்ட ரயில் பெட்டி மட்டும் எடுத்துச் செல்லப்பட்டு மிதியுள்ள பெட்டிகளுடன் மீண்டும் ரயிலானது மதுரை ரயில்வே நிலையத்தில் யார்ட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த ரயில் சக்கரம் தடம் புரண்டதால் சில ரயில்களின் தாமதத்திற்கு பின்பாக புறப்பட்டு சென்றது. மதுரை ரயில்வே நிலையத்தில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


