சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்.. கவரைப்பேட்டை அருகே பயங்கரம்!

 
ச்

திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 


ஆந்திரா நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மைசூர் தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலும், சரக்கு ரயிலும் ஒன்றொடொன்று மோதிக்கொண்டன இதில் 2 பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.