தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் பரிதாப உயிரிழப்பு

 
ச்

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி அரியலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். 


மதுரையில் தவெக மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி அரியலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் அடுத்த புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யாவும் அவரது நண்பரும் மாநாடு முடிந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கினர். முன்னதாக சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) தனது நண்பர்களுடன் வேனில் மதுரை த.வெ.க. மாநாட்டுக்கு சென்றபோது மதுரை சக்கிமங்கலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியை சேர்ந்த ரித்திக் ரோஷன்(18) என்ற வாலிபர் மாநாடு முடிந்து காரில் நண்பர்களுடன் ஊருக்கு திரும்பியபோது திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டுக்கு சென்று வந்த 3 தொண்டர்கள் உயிரிழந்தது கட்சியினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.