தமிழகத்தில் மீண்டும் அரங்கேறிய சோகம்..! பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் பலி..!

 
1

தேனியில் மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்கள் தீனதயாளன், சூர்யா என அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.