தீபாவளியன்று நிகழ்ந்த சோகம் - கறி வாங்க சென்ற தந்தை, மகன் பலி
Nov 8, 2026, 11:43 IST1794118439560
மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலூர் அருகே இறைச்சி வாங்கச் சென்றபோது இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை ஆறுமுகம், மகன் லோகேஷ் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நவீனும் உயிரிழந்தனர். ஆறுமுகம் மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,மற்றொரு வாகனத்தில் வந்த நவீன் என்பவரும் பலியாகினார். இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் ஒரே விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

