தீபாவளி நாளில் நடந்த சோகம்..! நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ - 6 வயது சிறுமி உள்பட 4 பேர் பலி..!

 
1 1

நவி மும்பையில் பிரதான பகுதியில் பல அடுக்குகள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடியின் 10வது தளம் திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீயானது, 11 மற்றும் 12ம் தளத்துக்கு வெகு வேகமாக பரவியது.
 

இதைக் கண்ட அங்குள்ளோர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.சிறிதுநேரம் போராடிய அவர்கள், தீயைக் கட்டுபடுத்தினர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 4 பேர் தீயில் கருகி சடலங்களாக கிடப்பதை கண்டனர். அவர்களின் உடல்களை கைப்பற்றிய அவர்கள், படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

10வது தளத்தில் எப்படி தீப்பிடித்தது என்பதற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.