த.வெ.க மாநாட்டிற்கு சென்றவர் ரயிலிலிருந்து குதித்தபோது உயிரிழந்த சோகம்
Oct 27, 2024, 10:59 IST1730006943417
த.வெ.க மாநாட்டிற்குச் சென்றவர் ரயிலிலிருந்து குதித்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடையின் பின்புறம் ரயில் வழித்தடத்தில், ரயில் மெதுவாக சென்றபோது கீழே குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சென்னையில் இருந்து மாநாட்டுக்காக சென்ற நிதிஷ் குமார் (21) என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டு பந்தலை பார்த்த பலர் ஆர்வமிகுதியில் ரயிலில் இருந்து குதித்தபோது தவறி விழுந்து நிதிஷ் குமார் என்பவர் உயிரிழந்தார்.


