உ.பி-யில் சோகம்..! தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி 6 பேர் பலி..!

 
1

உ,பி மிர்சாபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். நேரில் பார்த்தவர்கள் அந்தக் காட்சியைக் கொடூரமானது என்றும், ரயில் மோதியதில் உடல்கள் சிதைந்தன என்றும் விவரித்தனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள சோபன் நகரில் இருந்து பிரயாக்ராஜுக்கு, சோபன் - பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் சென்று நேற்று காலை கொண்டிருந்தது. வழியில், மிர்சாபூரில் உள்ள சூனார் ஜங்ஷனில் பயணியர் இறங்கினர்.அவர்களில் சிலர் பிளாட்பாரத்தில் இறங்காமல் தண்டவாளத்தில் இறங்கி, எதிரே உள்ள பிளாட்பாரத்துக்கு வேகமாக சென்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த ஹவுரா - கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இரு சிறுமியர், நான்கு பெண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் வருவதை அறிந்த ஆண்கள் வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் ஏறி உயிர் தப்பினர். பெண்கள் பிளாட்பாரத்தில் ஏற முடியாததால் விபத்தில் சிக்கினர். இதனால், தண்டவாளத்தில் ரத்தமும் சதையுமாக உடல்பாகங்கள் சிதறிக்கிடந்தன. உயிரிழந்தவர்கள் சவீதா, 28, சாதனா, 16, சிவகுமாரி, 12, அஞ்சு தேவி, 20, சுசிலா தேவி, 60, கலாவதி, 50, என அடையாளம் காணப் பட்டுள்ளது'

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.