தாய்ப்பால் கொடுத்தபோது நேர்ந்த துயரம் - துடிதுடித்து நின்ற குழந்தையின் உயிர்
மாங்காட்டில் தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு பிறந்த நாட்களே ஆன ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு கீழ் ரகுநாதபுரம், ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் இம்ரான்(30), இவர் ஸ்ரீதேவி(26), என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் ஸ்ரீதேவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்க வைக்க சென்றபோது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதறிப்போன பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தை இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குழந்தை இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

