தமிழ் நடிகர் கிங்காங் வீட்டில் சோகம்..!!

 
Q

நகைச்சுவை நடிகர் கிங்காங் தந்தை வி. ஏழுமலை,(வயது 78), உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் தந்தை ஏழுமலை (78), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

உலகமே தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால், நடிகர் கிங்காங்கின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்