வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்!!

 
rain

சென்னை மழைநீர் பெருக்கு  காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நிலவரம் குறித்து சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு இன்று சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரத்தை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. மழைநீர்  பெருக்கு காரணமாக மெட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

rain

மழை நீர் தேங்கியுள்ளதால் கேகே நகர் ராஜமன்னார் சாலை, கேபி தாசன் சாலை, திருமலைப்பிள்ளை  சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன. மாநகரப் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா மருத்துவமனை ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

rain

சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கி உள்ள சுரங்க பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. வாகனங்களில் செல்லும் பொது மக்கள் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.