"சர்வதேச லைசென்ஸ் வைத்து பைக் ஓட்டுவேன்" டிடிஎஃப் வாசனை எச்சரிக்கும் போக்குவரத்து காவல்துறை

 
"சர்வதேச லைசென்ஸ் வைத்து பைக் ஓட்டுவேன்" டிடிஎஃப் வாசனை எச்சரிக்கும் போக்குவரத்து காவல்துறை

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு  இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப் வாசன் வாகனம் ஓட்ட முடியாது என்று தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

ttf

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்  காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து இன்று மாலை சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய அவர் 10 ஆண்டுகளுக்கு தன்னுடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது மூலம் வாகனத்தை ஓட்டுவேன் என்று தெரிவித்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள  தமிழக போக்குவரத்து துறை இந்தியாவில் அவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாத போது சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை மட்டும் வைத்து வாகனத்தை இயக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.