கர்ப்பிணையை அவசரமாக அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. மடக்கிப்பிடித்து பணம் கேட்ட போலீஸ்..

 
கர்ப்பிணையை அவசரமாக அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. மடக்கிப்பிடித்து பணம் கேட்ட போலீஸ்..

நள்ளிரவில்  கர்ப்பிணியை அழைத்துக்கொண்டு அவசரமாக  சென்ற ஆட்டோ ஓட்டுநரை மடக்கி, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர்  அபராதம் வசூலித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கர்ப்பிணையை அவசரமாக அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. மடக்கிப்பிடித்து பணம் கேட்ட போலீஸ்..

போக்குவரத்து காவல் துறையினர் பொதுமக்களிடம்  மரியாதை குறைவாக நடந்து கொள்ளக் கூடாது என்றும்,   கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்  உயர் அதிகாரிகள் தொடர்ந்து அறுவுறுத்தி  வருகின்றனர்.   ஆனாலும் சில  காவல்துறையினர் பொதுமக்களிடம் முகம்  சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆவதும் அதிகரித்து வருகிறது.  அந்த வகையில், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து  காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது.

கர்ப்பிணையை அவசரமாக அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. மடக்கிப்பிடித்து பணம் கேட்ட போலீஸ்..

அது ஒருவழிப்பாதை என்பதால் அந்த ஆட்டோவை  போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மடக்கியுள்ளார். அந்த ஆட்டோவில்  கர்ப்பிணி மற்றும் குழந்தையை இருந்துள்ளனர்.  நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டி வந்ததால் 1500 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு செல்லுமாறு பாலமுரளி  கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர், இரவு நேரம் என்பதாலும்,  ஆட்டோவில் கர்ப்பிணி உள்ளதாலும் அவசரமாக செல்ல வேண்டும். மன்னித்து விடுங்கள் என  தெரிவித்திருக்கிறார்.  ஆனால், உதவி ஆய்வாளர் பாலமுரளி தொடர்ந்து அவரிடம் வாக்குவாதம் செய்து, அபராதம் செலுத்தாமல்  அனுப்ப முடியாது என்று மிகவும் கோபத்தோடு பேசுகிறார்.  இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அந்த நபர்கள்  உதவி ஆய்வாளர் மதுபோதையில் இருந்ததாக  குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.  மேலும் அந்த வீடியோவை பலர் ஷேர் செய்து கொண்டும்,  விமர்சித்து கமெண்ட் செய்துகொண்டும் இருக்கின்றனர்.