சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்- செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்

 
சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்- செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக தங்களின் சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிங்கபெருமாள்கோவில், மல்ராசபுரம், மறைமலைநகர் என சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சிங்கபெருமாள்கோவில் பகுதியில் போக்குவரத்து போலீசார் சட்டம் ஒழுங்கு போலீசார் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை வண்டலூர் சரக துணை ஆணையர் ஜெயராஜ் தலைமையில் மறைமலைநகர் காவல் நிலைய ஆய்வளர் முத்து சுப்பிரமணியன் மேற்பார்வையில்  சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில்  அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்துவருகின்றனர்.