தண்டவாள பராமரிப்பு பணி- மின்சார ரயில் சேவையில் மாற்றம்
ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 1ம் தேதி மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
![]()
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதேபோல் ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 1ம் தேதி மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர் பணிமனையில் ஜூன் 1ல் காலை 11.45 முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்புப் பணி நடக்கிறது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.


