நள்ளிரவில் நச்சு புகையில் சிக்கிய சென்னை..! 3 மணி நேரத்தில் 55 புள்ளிகள் உயர்வு!

 
1

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள்'தான்.சென்னையில் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அதேபோல, இரவிலும் 7- 8 மணி வரை பட்டாசுகளை வெடித்து தள்ளினர். மழை பெயத போதிலும் மழை விட்ட நேரத்தில் மொத்தமாக மக்கள் பட்டாசுளை வெடித்து தள்ளினர். தீபாவளி பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசுவும் கடுமையாக அதிகரித்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டங்கள் நீடித்த நிலையில், சென்னையில் நள்ளிரவிலும் காற்று மாசு அதிகமாகப் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 249 ஆகவும், மணலி வில்லேஜ் பகுதியில் 219 ஆகவும் உயர்ந்துள்ளது. மணலியில் 197, அரும்பாக்கத்தில் 195, பெருங்குடியில் 174, கொடுங்கையூரில் 172, வேளச்சேரியில் 113 ஆகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக மணலி வில்லேஜ் பகுதியில் இரவு 9 மணிக்கு 164 ஆக இருந்த காற்றுத் தரக் குறியீடு, நள்ளிரவு 12 மணிக்கு 219 ஆக உயர்ந்துள்ளது. 3 மணி நேரத்தில் 55 புள்ளிகள் அதிகரித்துள்ளன.

காற்றுத் தரக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான காற்று மாசு என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமான காற்று மாசு என்றும் கருதப்படுகிறது. காற்று மாசு அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். நீண்ட நேரம் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தீபாவளி கொண்டாட்டங்களின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசு அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நள்ளிரவு 12 மணி அதிகாரப்பூர்வ பதிவுகளில் ராயபுரத்தில் 249, மணலி வில்லேஜ் பகுதியில் 219 ஆகக் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.