முதுமலையில் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை
நீலகிரி மாவட்டம் முதுமலையில் சஃபாரி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் பொருட்டு, மைய வாழ்விடங்களின் சுற்றுலா மண்டலங்களில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வாகனத்தில் தங்களது கைப்பேசிகளை ஒப்படைத்துவிட்டு, சஃபாரி நிறைவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வனவிலங்குகளைப் பாதுகாக்க தங்களின் ஒத்துழைப்பை வழங்குங்கள்.
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் 17.11.2025 தேதியிட்ட 1995-ஆம் ஆண்டின் ரிட் மனு எண் 202-இல் உள்ள வழிகாட்டுதல்களின்படி - "வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, முக்கிய வாழ்விடங்களின் சுற்றுலா மண்டலங்களில் கைபேசிகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது". பார்வையாளர்கள் தங்களது கைபேசிகளை சஃபாரிக்கு முன்பாக சஃபாரி வாகனத்தில் வைத்துவிட்டு, சஃபாரிக்குப் பிறகு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

