இன்று பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

 
1 1

கொடைக்கானலில் சிறந்த சுற்றுலா இடமாக பேரிஜம் ஏரி பகுதி விளங்குகிறது. இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இந்த ஏரியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்று பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் வழக்கம்போல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கொடைக்கானல் வனச்சரகர் தெரிவித்துள்ளார்.