கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
திண்டுக்கல்லுக்கு நாளை (அக்.25) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீலகிரியில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மலைப்பயணத்தை முற்றிலும் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது,
இந்நிலையில் திண்டுக்கல்லுக்கு நாளை (அக்.25) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொடைக்கானல் மலை சாலையில் நாளை, நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு மேல் காலை 7 வரை பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு துண்டிக்கப்பட்ட சாலைகளால் பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் ஆகிய இரு நகரங்களுக்கும் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்துவருகின்றனர்.

