குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை!

 
கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு! கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கள் முதல் அதி கனமழையும் 
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், 
திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்த நிலையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.