இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டம்- உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கிறார்

 
கலைஞர் நூற்றாண்டில் பாசிஸ்ட்டுகள் வீழ்ந்தார்கள் என்ற வரலாற்றை படைக்க உழைப்போம்- உதயநிதி ஸ்டாலின்

மாநில உரிமை மீட்பை முழங்கும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

Image

இதுதொடர்பாக திமுக இளைஞரணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை இளைஞர் அணிச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து இன்று (18.01.2023) காலை 7.00 மணிக்குத் தொடங்கி வைக்கிறார். முன்னதாக அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார்.

எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை 20.01.2024 அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது. இளைஞர் அணிச் செயலாளர் அவர்கள் மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் கழகத் தலைவரிடம் ஒப்படைக்கிறார். மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மாநாட்டுச் சுடரை ஏந்திச் செல்கின்றனர்” என்றார்.