அரசு உயரதிகாரிகள் அடுத்த 6 மாதங்கள் வெளிநாடு செல்ல தடை..!

 
flight

புதுவை அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்துத் துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள், கல்விச்சுற்றுப் பயணங்கள், ஆலோசனைப் பயணங்களை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

அரசின் அதிகாரபூர்வ வாகனங்களின் பயன்பாடு சிக்கனமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக வாகனப் பகிர்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பிற அரசு நிறுவனங்களில் அரசின் சொத்துகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் திரு முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.

“அதிகாரிகளும் பணியாளர்களும் மதிய உணவு நேரத்தில் தங்களது வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, அலுவலகத்திற்கு உணவை எடுத்து வந்து சாப்பிடுவது நல்லது.

மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியின்போது துல்லியத்தன்மையை மேம்படுத்தவும், சுமுகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், திறம்படத் தரவுகளைச் சேகரிக்கவும் அப்பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.