நாளை விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம்

 
விஜய் விஜய்

நாளை விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம்நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

விஜய்

இதுதொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தோழர்களுக்கு வணக்கம்.கழகத் தலைவர் அவர்களின் தலைமையில், நாளை (05.11.2025, புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள கழகச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, சிறப்புப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.