ரெட் அலர்ட் எச்சரிக்கை- நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

 
rain school rain school

அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain school leave

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒருநாள் சுற்றுலா தளங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, பேரிடர் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்களை நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 1077 என்ற கட்டணமில்லாத எண், 0423- 2450034, 2450035 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.