நாளை வெளுத்து வாங்கப்போகும் மழை - வெளியான அலர்ட்

 
rain

தமிழகத்தில் மே 9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சேலத்திலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.