கடம்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - நாளை உள்ளூர் விடுமுறை

 
tt

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

karur

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கை ஒட்டி குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

local holiday

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 27-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.