திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 
rain school leave

வங்கக்கடலில் இன்று காலை நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு முதலே திருவள்ளூரில் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. 

TN rains see Collectors shower wit, take social media by storm - The Hindu  BusinessLine


அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் புதுச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் இன்று காலை முதல் திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை, பூண்டி, கடம்பத்தூர், பேரம்பாக்கம், மணவாளநகர், திருமழிசை, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, தாமரைப்பாக்கம் , வெங்கல் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.