கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

 
school

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

school

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம் மற்றும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் கொள்கின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்தாமரை குளம், நரிக்குளம், கொட்டாரம், மையிலாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட  பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததன் எதிரொலியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.