புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 
rain school leave

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால்  மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Holiday


தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும் கடலூர் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக ரெயின்போ நகர், செல்லான் நகர், பாவாணர் நகர், சாமிபிள்ளைத் தோட்டம், வெங்கட்டா நகர் போன்ற தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. காரைக்கால் மாவட்டம் முழுவதும் விடிய விடிய 15 செமீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. பி.கே சாலை பகுதியில் உள்ள உடையான் குளம், மழை நீரால் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 


புதுச்சேரி, காரைக்காலில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதன் காரணமாக நாளை (நவம்பர் 15) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு- தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்து உள்ளார்.