புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ.14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக நவம்பர் 13 முதல் 17 வரை புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், சீர்காழி, கும்பகோணம், பரங்கிப்பேட்டையில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு #திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல் சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கன மழை காரணமாக நாளை (14/11/23,)புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.