நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

 
rain school

நாளை(15.11.23) சென்னை மாவட்டம் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளது.

school

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும் கடலூர் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதன் காரணமாக நாளை (நவம்பர் 15) சென்னையில் உள்ள அரசு- தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.