இந்த மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
பள்ளி கல்லூரிகள் விடுமுறை

தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இன்று தான் மழை தீவிரமாகும் என ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

இச்சூழலில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 2 தினங்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிகமாக மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

ஏற்கெனவே இந்த மாவட்டங்களில் மழை சேதங்கள் அதிகமாகியுள்ளன. குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.