நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

 
duraimurugan

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நாளை (பிப்.20) காணொளிக் காட்சி வாயிலாக  மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

MKs

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ‘தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்’ 20-02-2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்
பார்வையாளர்கள் தொகுதி அளவில்தொகுதிப் பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.