கோயம்பேட்டில் தக்காளி ரூ.130க்கு விற்பனை : பண்ணை பசுமை கடைகளை நாடும் பொதுமக்கள்!!!

 
tomato

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து சென்னையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

tomato

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை  ஒரு கிலோ ரூபாய் 130 க்கு விற்பனையாகிறது. அதேபோல பெங்களூரு தக்காளி ரூபாய் 140 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தக்காளி விலை மட்டுமன்றி வரத்து குறைவால் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர தொடங்கியுள்ளது.  பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், அவரைக்காய் ரூபாய் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

tomato

அதேசமயம் சென்னையில் பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 79 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. பசுமை கடைகளில் விற்க ஒரு நாளைக்கு 15 டன் தக்காளியை கொள்முதல் செய்ய கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.