தக்காளி விலை தொடர் உயர்வு..
Aug 11, 2025, 09:34 IST1754885049733
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக விலை உயர்ந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மொத்த விற்பனையில் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் கிலோவுக்கு மேலும் ரூ.5 அதிகரித்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.50க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று சந்தைக்கு மேலும் வரத்து குறைந்ததால் தக்காளி கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கும் சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

