சுங்கக்கட்டணம் உயர்வு எதிரொலி- ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்வா?

 
omni bus

சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் உயராது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Live Chennai: Omni buses from other states would not be allowed to operate  in TN after 16th December?,Omni buses from other states would not be  allowed to operate in TN after 16th

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இது ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி  சில சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி  சில சுங்கச்சாவடிகளிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சுங்கச்சாவடிகளில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.  ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.  இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தொடர்ந்து லாரி  உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Omni bus registered outside Tamil Nadu allowed to operate till June 18  morning

இந்நிலையில் சுங்கக்கட்டணம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட போதிலும் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது. வழக்கமான ஆம்னி பேருந்து கட்டணமே தொடரும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்டுள்ள டோல்கேட் கட்டணத்தை திரும்பப் பெறுமாறும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.