தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

 
Toll


தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

 நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்   816 சுங்கச்சாவடிகல் அமைந்துள்ளன. இங்கு 4 சக்கர வாகனம், பேருந்து, லாரிகள், கனரக வாகனம் என வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது வெவ்வேறு சுங்கச்சாவடிகளில்  ஆண்டுக்கு இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம்  உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில்  மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.  

toll plaza

இவற்றில் 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய சுங்கக்கட்டணம் அமலுக்கு வந்தது.  இந்த நிலையில் ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தடுவதாகவும், இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட ரூ. 5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.