தமிழகத்தில் சுங்கக்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!

 
toll
தமிழகத்தில் அமைந்துள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.